ஆப்பிள் நிறுவன கைக்கடிகாரங்களுக்கு தடை விதித்த பிரபல நாடு

#Health #America #company #Banned #Apple #Watch #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
ஆப்பிள் நிறுவன கைக்கடிகாரங்களுக்கு தடை விதித்த பிரபல நாடு

ஐபோன், கணினி உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப சாதனங்களை தயாரிக்கும் நிறுவனம் ஆப்பிள். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. 

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கென்று ஒரு தனித்தன்மை மற்றும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இதற்கிடையே ஆப்பிள் நிறுவனத்துக்கும், பிரபல மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோவுக்கும் இடையே காப்புரிமை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

இதுதொடர்பாக சர்வதேச வர்த்தக ஆணையத்தில் மசிமோ நிறுவனம் வழக்கு தொடுத்தது. இதில் மசிமோ நிறுவனத்தின் காப்புரிமையை ஆப்பிள் நிறுவனம் மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. 

எனவே ஆப்பிள் சீரியஸ் 9 மற்றும் ஆப்பிள் அல்ட்ரா 2 ஆகிய ஸ்மார்ட் கைக்கெடிகாரங்களை அமெரிக்காவில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 அதேசமயம் கையிருப்பில் உள்ள கைக்கெடிகாரங்களை அங்குள்ள சில்லறை விற்பனையாளர்கள் விற்பனை செய்யலாம். அதேபோல் அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் விற்பனை செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை என சர்வதேச வர்த்தக ஆணையம் கூறி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4