மகரம் உங்கள் ராசியா ? தொழில், செல்வம் மற்றும் ஆரோக்கியம் எப்படியிருக்கும் ?

#Astrology #Job Vacancy #Healthy #Lanka4 #ஆரோக்கியம் #தொழில் #பணம் #ஜோதிடம் #ராசிபலன் #லங்கா4 #money #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mugunthan Mugunthan
3 months ago
மகரம் உங்கள் ராசியா ? தொழில், செல்வம் மற்றும் ஆரோக்கியம் எப்படியிருக்கும் ?

ஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் மகர ராசியினர் எப்படிப்பட்ட வாழ்க்கை, எந்த வகையான தொழில் செய்வார்கள் மற்றும் அவர்களின் செல்வ நிலை எப்படி அமையும் என்பதை பார்ப்போம்.

  •  இரக்க சுபாவம் கொண்டவர். உணர்ச்சிவசப்படுபவர், பயப்படுபவர். மற்றவர்களின் எண்ணத்தை புரிந்து அதற்கேற்ப செயல்படுபவர்.

  •  தன்னம்பிக்கை கொண்டவர். செலவைக் குறைத்துக் கொள்வார். அதிகம் பேசமாட்டார். பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார். மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் பெரியவர்களை மதிப்பது இவர்களுக்கு நிகரே இல்லை. தன்னையும் தன்னை சுற்றியுள்ள வரையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வார்.

  •  இவரது பாதை நல்ல பாதையாகவே இருக்கும். மகர ராசிக்காரர்களின் கைகள் பரந்து காணப்படும். இவர்களுக்கு சனி மற்றும் சுக்கிரனின் பார்வை இருப்பதால், இவரது உடல் சீராக இருக்கும்.

  •   மகர ராசிக்காரர்கள் ஒரு வேளை மட்டும் உணவு உண்ண வேண்டி வரும். பாதம், தலை வலி, கால் வலி, தோல் நோய், கண் குறைபாடு, தலைசுற்றல், ரத்த சோகை, பல்வலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வியாதியும், இரண்டு வியாதியும் ஒரே நேரத்தில் வந்து தொல்லை கொடுக்கும்.

  •  இவர்களின் அதிர்ஷ்ட நாள் சனிக்கிழமை. சனிக் கிரகத்தின் சஞ்சாரம் இருப்பதால் இவர்களுக்கு சனிக்கிழமை உகந்த என்ன ஆகும். 

    images/content-image/1705563100.jpg

தொழில்

  •  இவர்களின் தொழில், வழக்கறிஞர் உணவு சம்பந்தமான தொழில், நிலக்கரி சுரங்கம் போன்றவைகள் நல்ல லாபம் கிட்டும். மகர ராசிக்காரர்கள் நல்ல வழக்கறிஞராக செயல்படுவார்கள்.

  •  லாபத்தை பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர். எந்த தொழிலை செய்தாலும் நஷ்டம் அடைய மாட்டார்கள். தர்மம் செய்ய அஞ்சமாட்டார்கள். இவர்களது செலவை குறைக்க முடியாது. 

  • மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே பாதி நேரம் செலவழியும். சாதாரண பண நடமாட்டம் இருக்கும். மகர ராசிக்காரர்கள் நல்ல கலைஞராக இருப்பார். எழுத்தாளர், சேவகர் கதையாசிரியர் போன்ற துறைகளில் சிறப்பான பெயர் பெறுவார்.

  •  இவர்களது ஜாதகப்படி இவர்களது புகழும் அமையும். இவர்களது ஜாதகத்தில் குரு உச்சத்தில் இருப்பதால் நல்ல வாழ்க்கை அமையும். 

அதிர்ஷ்ட நிறம்-

கருப்பு, நீலம் நிறங்கள் அதிர்ஷ்டம். எப்போதும் கருப்பு அல்லது நீல நிற துணியை உடன் வைத்திருப்பது நல்லது. 

 அதிர்ஷ்ட எண் 

4 மற்றும் 8 அதிர்ஷ்ட எண்கள் ஆகும். 4 மற்றும் 8 எண்ணின் கூட்டு எண்களும் அதிர்ஷ்டமே. இது தவிர 3, 7 பரவாயில்லை. 1,2,9 அசுபம்