இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பண்டாரநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை!

#SriLanka #Airport
PriyaRam
1 year ago
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பண்டாரநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரலாற்றில் முதல் தடவையாக புகைப்படக்கருவி அமைப்பை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கும் தேடப்படும் குற்றவாளிகளின் கண்காணிப்பை மேம்படுத்துவதை நோக்கமாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை,நாடளாவிய ரீதியில் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட 1,091 பேரை பொலிஸார் வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/12/1703486493.jpg

அவர்களில் சுமார் 135 பேர் சிறையில் இருந்தபோதும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த தகவல் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்தார்.

  கைது செய்யப்பட்ட ஏராளமானவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அலஸ் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!