எம்.ஜி.ஆரின் 36வது நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!
#India
#SriLanka
#Vavuniya
#Tamil Nadu
PriyaRam
1 year ago
தமிழக முன்னாள்முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36வது நினைவு தினம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இதன்போது எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு தீபமேற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுப் பேருரையும் இடம்பெற்றிருந்தது.
வவுனியா எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வர்த்தக நலன்புரி சங்கத்தின் தலைவர் கோ. சிறீஸ்கந்ததராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சட்டத்தரணி தயாபரன், நற்பணி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.