யாழ்ப்பாணத்தில் 16 கைதிகள் விடுதலை!

#SriLanka #Jaffna #Prison
Mayoorikka
1 year ago
யாழ்ப்பாணத்தில் 16 கைதிகள் விடுதலை!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்று திங்கட்கிழமை (25) விடுதலை செய்யப்பட்டனர்.

 யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை சிறைச்சாலையில் இருந்து திங்கட்கிழமை காலை 9 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக வழியனுப்பி வைத்தனர். ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

 இதேவேளை நாடளாவிய ரீதியில் 1,004 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!