உலகளவில் டெங்கு நோய் பரவும் நாடுகளில் இலங்கையும் முதல்நிலையில்!

#SriLanka #Healthy #World_Health_Organization #Dengue
Mayoorikka
1 year ago
உலகளவில் டெங்கு நோய் பரவும் நாடுகளில் இலங்கையும் முதல்நிலையில்!

உலகளவில் டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

 இந்நிலையில் டெங்கு நோய் பரவும் முதல் 30 நாடுகளில் இலங்கை உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

 இவ்விடயம் தொடர்பாக, உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவிக்கையில்,

 “ இந்த ஆண்டு உலகளவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான டெங்கு நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, 5,000க்கும் அதிகமான மரணங்களும் பதிவாகியுள்ள.

 தென்கிழக்காசிய பிராந்தியத்தில், தமது 11 உறுப்பு நாடுகளில் 10 நாடுகள் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/1703478912.jpg

 இந்த ஆண்டில், பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து உட்பட பல நாடுகளில், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

 குறிப்பாக, இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிக டெங்கு அச்சுறுத்தலை எதிர்நோக்கும் முதல் 30 நாடுகளின் தரவரிசையில் உள்ளது.” என சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!