ஆட்சியாளர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதில் இருந்து விலகி நிற்க முடியாது : இரா.சம்பந்தன்!

#SriLanka #R. Sampanthan #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஆட்சியாளர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதில் இருந்து விலகி நிற்க முடியாது : இரா.சம்பந்தன்!

இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்க முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,  வடக்கு, கிழக்கு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள இரா. சம்பந்தன் மேற்படி தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  தமிழ் மக்கள் நீண்டகாலமாக இனப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வொன்றை வலியுறுத்தி வருகிறார்கள். 

அவர்கள் அதற்காக தொடர்ச்சியாக தமது ஆணையை வழங்கியும் வருகின்றார்கள். அந்த வகையில் ஆட்சியாளர்கள் இனப் பிரச்சினைக்கான தீர்வினை தொடர்ந்தும் காலம் கடத்திச் செல்ல முடியாது. 

அவர்கள் தீர்வினை வழங்குவதிலிருந்து விலகி நிற்கவே முடியாது. தமிழ் மக்கள் தங்களுடைய கருமங்களை தாங்களே ஆற்றும் வகையில் சுய நிர்ணய அடிப்படையில் சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் மீளப் பெற முடியாத வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடைவது நோக்கி நாம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!