சலார் படத்தின் முதல் நாள் வசூல்
#Cinema
#Actor
#Collection
#Tamilnews
#money
#Kollywood
#Hollywood
Prasu
1 year ago
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி நேற்று (டிசம்பர் 22) வெளியான திரைப்படம் "சலார்." பிரபாஸ் நாயகனாக நடித்திருக்கும் சலார் படத்தை கே.ஜி.எஃப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது.
இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரத்விராஜ் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன சலார் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், சலார் படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ. 178.7 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
இதில் நடித்துள்ள பிரத்விராஜ் ஐந்து மொழிகளிலும் தானே டப்பிங் செய்துள்ளதாக படம் ரிலீசாகும் முன்பே அறிவித்து இருந்தார்.