பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ் இளைஞர் கைது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ் இளைஞர் கைது!

பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (23.12) கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரான்ஸ் கடவுச்சீட்டில் சந்தேகம் கொண்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகள், அவரை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். 

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த 22ஆம் திகதி யாழ்ப்பாணம் முல்லைத்தீவில் இருந்து கொழும்பு ஆமர் வீதியில் உள்ள விடுதிக்கு வந்த போது அவரது இலங்கை கடவுச்சீட்டை அங்கிருந்த தரகர்கள் இருவர் பெற்றுக்கொண்டு இந்த பிரான்ஸ் கடவுச்சீட்டை கொடுத்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். 

 சர்வதேச பொலிஸாரின்தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட கடவுச் சீட்டு பட்டியலில் இந்த கடவுச்சீட்டு உள்ளது தெரியவந்துள்ளது. இதன்படி, சந்தேக நபரை கைதுசெய்த அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!