நாடளாவிய ரீதியில் மூடப்படவுள்ள மதுபான சாலைகள்!
#SriLanka
PriyaRam
1 year ago
எதிர்வரும் திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபானம் விற்பனை நிலையங்களை மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யலாம் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பௌர்ணமி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் உள்ள மதுபானம் விற்பனை நிலையங்களை மூடுமாறும் கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஹோட்டல்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.