அதிகரிக்கிறது உணவகங்களில் உணவுகளுக்கான விலை!
#SriLanka
#Food
PriyaRam
1 year ago
இலங்கையில் தற்போது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கருத்திற்கொண்டு அடுத்த சில நாட்களில் உணவின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் அரிசி, மரக்கறிகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலைகள் இன்னும் அதிகமாகவே காணப்படுவதால், சோறு, பிரைட் ரைஸ், கொத்து போன்றவற்றின் விலைகள் எதிர்வரும் சில தினங்களில் அதிகரிக்கப்படுமென சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மேலும் தெரிவித்திருந்தார்.