அத்தியாவசிய மருந்துகளுக்கு ஏற்படவுள்ள தட்டுப்பாடு - முன்னாள் சுகாதார அமைச்சர் மீது குற்றச்சாட்டு!

#SriLanka #Keheliya Rambukwella #Medicine
PriyaRam
1 year ago
அத்தியாவசிய மருந்துகளுக்கு ஏற்படவுள்ள தட்டுப்பாடு - முன்னாள் சுகாதார அமைச்சர் மீது குற்றச்சாட்டு!

எதிர்காலத்தில் 250 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என சிவில் உரிமைகள் தொடர்பான சுகாதார தொழிசங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் காலப்பகுதியில் தரகு பணத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பதிலாக அத்தியாவசியமற்ற பல மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டமையே இதற்கு பிரதான காரணமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

images/content-image/2023/12/1703306093.jpg

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட தரப்பினரே இதற்கு பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தரமற்ற இம்யூனோகுளோப்லின் தடுப்பூசியை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் என கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த நபரே, அந்த நிறுவனத்தின் உண்மையான உரிமையாளரா? என்ற கேள்வி நிலவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தடுப்பூசியில் புற்று நோயை கட்டுப்படுத்துவதற்கான இம்யூனோகுளோப்லின் காணப்படவில்லை எனவும் சிவில் உரிமைகள் தொடர்பான சுகாதார தொழிசங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!