நான் அசல் துவாரகாவும் அல்ல! போலி துவாரகாவும் அல்ல! சுவிஸ் பெண் அதிரடி (பிரத்தியேக செய்தி)
போலித் துவாரகாவாக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்ட சுவிஸர்லாந்து துர்கா மாநிலத்தில் வாழும் பெண் தான் போலித் துவாரகா இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
போலித் துவாரகா என அவருடைய அடையாள அட்டையை இணைத்து அவருடைய புகைப்படங்கள் குடும்பத்தினருடைய புகைப் படங்கள் அனைத்தையும் இணைத்து பல ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வந்தது.
குறித்த பெண்ணினுடைய தந்தையார் அமெரிக்காவில் உள்ள தொழிலதிபர்.
போலி துவாரகா என விமர்சிக்கப்பட்ட பெண் திருமணமாகி ஒரு பிள்ளையுடன் கணவனை பிரிந்து வாழந்து வருகின்றார்.
இந்த நிலையில் அந்தப் பெண் தான் மன உளைச்சலிற்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் தன்னை தேவையற்ற முறையில் விடுதலைப் புலிகளினுடைய பல பிரிவுகளாக இருக்கின்ற பிரிவினர் தன்னை விமர்சிப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கின்றார்.
சுவிஸர்லாந்தில் இருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் துவாரகா தொடர்பான சர்ச்சசைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருபவரும் பல நிதி மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு உள்க்ளாக்கப்பட்டவரும் என்று விமர்சிக்கப்படும் அப்துல்லா குழுமத்திற்கு தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அத்தோடு அப்துல்லா சார்பாக பேசுபவர்களுக்கு தனக்கும் தொடர்பு இல்லை எனவும் கூறியுள்ளார்.
தான் போரினால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டிலே அகதி அந்தஸ்து அனுமதிக்கப்பட்ட விசாவில் வாழ்ந்து வருபவர் அத்தோடு சுவிஸில் அகதி அந்தஸ்து பெற்று வாழ்ந்து வருபவள் என்னை ஒத்த முகச்சாயல் உள்ள ஒருவராக இருப்பதால் ஒருசில காரணங்களை காட்டி அதை ஆதரவாக விமர்சிப்பவர்களும் எதிர்ப்பாக விமர்சிப்பவர்களும் என்னை சாடுவதால் தான் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மற்றும் இது தொடர்பில் தான் சட்டநடவடிக்கை எடுப்பதற்காக காணொளிகளை பரப்புபவர்கள் மீதும் சமூகவலைத்தளங்களில் தன்னுடைய புகைப் படங்களையும் குடுத்பத்தினரது புகைப்படங்களையும் தன்னுடைய அடையாள அடடையை வெளிடுபவர்கள்
மீதும் தான் சுவிசாரலாந்தில் உள்ள சட்டநிபுணர் ஊடாக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்தம் ஆகி வருகின்றேன் அந்த சட்ட நடவடிக்கையில் பலர் சிக்குவார்கள் என தனக்கு தெரிந்த விடையம். தனக்கு ஒரு பாதுக்காப்பு தேவை என்பதால் தான் பாதுகாப்பாக இருப்பதற்கு சுவிஸ் அரசாங்கத்தின் பாதுகாப்பை பெற்றுக் கொண்டு இந்த சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் பல சட்டத்தரணிகளுடன் தான் ஆலோசனை செய்திருப்பதாகவும் முக்கியமாக சுவிஸர்லாந்தில் வாழும் ஈழ தமிழ் மொழிபெயர்பாளர்கள் மற்றும் ஆலோசகர்களோடயும் தமிழ் ஆர்வலர்களோடும் இதுதொடர்பில் அலையோசனை கேட்பதாகவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பான வழக்குகளை தன்னுடைய சட்ட ஆலோசகர்களூடாகவும் பெண் மொழிபெயர்ப்பாளர் உள்ளடங்கலாக மூன்று மொழிபெயர்ப்பாளர்களூடாக சட்டத்தரணி ஒருவரை நியமித்திருக்கின்றோம். இதுதொடர்பான வழக்குகளை தன்னுடைய சட்ட ஆலோசகர்களூடாகவும் மற்றும் மூன்று மொழிபெயர்பாளர்களூடாகவும் தனது வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தன்னை விமர்சிப்பதோ தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதோ நிறுத்திக் கொள்ளுமாறும் அவ்வாறு வெளியிடும் பட்சத்தில் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு தன்னுடைய புகைபபடங்களை வெளிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவருடைய அடையாள அட்டையை திருடி வெளியிட்ட நபர் அவருடைய குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகிய ஆண் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
போலித் துவாரகா என அடையாளம் காணப்பட்ட பெண் தற்பொழுது ஒழிந்து தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும் கூறப்பப்டுகின்றது. குறித்த போலித் துவாரகா தொடர்பில் காணொளிகளை வெளியிட்டவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த சுவிஸ் நாட்டிலுள்ள ஊகவியலாளர் உட்பட பலர் மீது பொது அமைப்பு ஒன்று வழக்கு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.