மன்னாரில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர்!

#SriLanka #Mannar #Police #Sri Lankan Army
Mayoorikka
1 year ago
மன்னாரில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர்!

மன்னார் -பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (22) காலை முதல் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு சோதனைகளை முன்னெடுத்தனர்.

 பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள வீடுகளுக்குச் சென்ற பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் போதைப் பொருள் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

images/content-image/2023/1703237324.jpg

 பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

images/content-image/2023/1703237340.jpg

 இந்த நிலையிலே பேசாலை பொலிஸ் பிரிவில் குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 

images/content-image/2023/1703237361.jpg

 மேலும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதோடு சில போதைப்பொருட்களும் சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!