போதைப்பொருள் விநியோகம் - கட்சியின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்ட பிரமுகர்!
#SriLanka
#Samagi Jana Balawegaya
#drugs
PriyaRam
1 year ago
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரான அமித பண்டாரவின் கட்சி உறுப்புரிமையை நீக்கவும், மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அமித பண்டார நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.