இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து விமல் வீரவன்சவிற்கு எழுந்துள்ள சந்தேகம்
இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குல் நடத்தியதன் பின்புலத்தில் ரஷ்யா இருக்கக் கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதன் பின்புலத்தில் புடின் இருக்கக் கூடும். ஹமாஸுக்கு பின்னால் இருந்து உதவுவது ஈரான் தான் என்பதை அனைவரும் அறிவார்கள்.
ரஷ்யாவின் சிறந்த நண்பர்களில் ஈரானும் ஒன்று. ”ஹமாஸுக்கு உதவுங்கள், அப்போது உக்ரைன் மீதான கவனம் முற்றிலும் மறைந்துவிடும். இரு தரப்புக்கும் ஒரே நேரத்தில் அமெரிக்கா உதவ முடியாது.
நீங்கள் அங்கே துப்பாக்கிச் சூடு நடத்தினால், உக்ரைன் விவகாரத்தை என்னால் கையாள முடியும்” என ரஷ்ய ஜனாதிபதி புடின் ஈரானிடம் கூறியிருக்க கூடும் என்பது எனது கருத்து. இது ஊகம்தான்.
ஆனால் இது போன்ற நகர்வுகள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஹமாஸுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்குகிறது. இந்த நேரத்தில், உக்ரைனில் உள்நாட்டு மோதல் உள்ளது.
மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவருவதால் இவற்றை திசைத்திருப்ப சில முயற்சிகள் இடம்பெற்றிருக்கலாம்.
உக்ரைனைப் பயன்படுத்தி அமெரிக்கா விளையாடுகிறது. ஹமாஸைப் பயன்படுத்தி இங்கு விளையாடுவது யார் என்று எனக்குத் தெரியவில்லை.” என்றார்.