கடந்த 24 மணிநேரத்தில் நடந்த விஷேட சுற்றிவளைப்புகளில் 1865 பேர் கைது

#SriLanka #Arrest #Police #people #island #drugs #sri lanka tamil news #Rescue
Prasu
1 year ago
கடந்த 24 மணிநேரத்தில் நடந்த விஷேட சுற்றிவளைப்புகளில் 1865 பேர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 21 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,865 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 145 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. அத்துடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 40 சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன், போதைப்பொருளுக்கு அடிமையான 134 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 154 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கையில், 

ஹெரோயின் - 613 கிராம் 

ஐஸ் - 746 கிராம் 

கஞ்சா - 16 கிலோ 500 கிராம்

கஞ்சா செடிகள் - 272,041 

ஹஷீஷ் - 263 கிராம்

மாவா - 49 கிலோ 400 கிராம்

ஹேஷ் - 16 கிராம்

தூள் - 852 கிராம்

மதன மோதகம் - 479 கிராம்

போதை மாத்திரைகள் - 3142 கைப்பற்றப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!