போலி துவாரகா தொடர்பில் காணொளி வெளியிட்டவர்கள் விரைவில் கைதாகுவர்! பாதுகாப்பு அமைச்சர்

#SriLanka #Sri Lanka President #Arrest #Defense
Mayoorikka
1 year ago
போலி துவாரகா தொடர்பில் காணொளி வெளியிட்டவர்கள் விரைவில் கைதாகுவர்! பாதுகாப்பு அமைச்சர்

பிரபாகரனின் மகள் எனக் குறிப்பிட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று காணொளியை வெளியிட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

 ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனத் தெரிவிக்கப்பட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று வெளியிடப்பட்ட காணொளி தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. 

அதற்கமைய அது தயாரிக்கப்பட்ட ஒரு காணொளி என்பது இனங்காணப்பட்டுள்ளது. 

 அது தொடர்பில் பயங்கரவாத விசாரணைப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. 

இவ்வாறான காணொளிகளை வெளியிடுபவர்களை எவ்வாறேனும் இனங்கண்டு அவர்களை நிச்சயம் கைது செய்வோம் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!