கிருலப்பனையில் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த போதகருக்கு விளக்கமறியல்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கிருலப்பனையில் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த போதகருக்கு விளக்கமறியல்!

கிருலப்பனையில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து ஆயர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் 9 சிறுமிகளை அவர்களது பெற்றோர் அல்லது தகுந்த பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் ரிஸ்வான் இன்று (21.12) உத்தரவிட்டுள்ளார்.  

கிருலப்பனை பொலிஸாரும், உள்ளூர் நன்னடத்தை அதிகாரியும் நீதிமன்றில் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டு, கற்பழிக்கப்பட்ட 9 சிறுமிகளும் இன்று பொலிஸாரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.  

சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் போதகர் ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

11 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 9 சிறுமிகள் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த சிறுமிகள் மூன்று குடும்பங்களின் சகோதரிகள் எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!