எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு தோல்வியே - ஆருடம் வெளியிட்ட முன்னாள் தூதுவர்!
#SriLanka
#Election
#Ranil wickremesinghe
#President
PriyaRam
1 year ago
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற மாட்டார் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்டோனியாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானம் ஒன்று நேற்று, முதல் முறையாக இயக்கப்பட்டது.

அதன்படி 117 பயணிகளுடன் SkyUP விமானம் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமான சேவை குறித்து கருத்து வெளியிட்டுள்ள உதயங்க வீரதுங்க, வாரத்திற்கு 05 விமானங்கள் மூலம் 06 நாடுகளைச் சேர்ந்த 16,500 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் இதனால் 25 மில்லியன் டொலர்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.