போதைப்பொருள் வியாபார முதலைகள் தலைமறைவு - சந்தேகம் வெளியிட்டுள்ள தேரர்!

#SriLanka #drugs
PriyaRam
1 year ago
போதைப்பொருள் வியாபார முதலைகள் தலைமறைவு - சந்தேகம் வெளியிட்டுள்ள தேரர்!

போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களை ஒழிப்பதற்காக பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நீதிக்கான வேலைத்திட்டத்தின் மீது தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் செயற்பாடுகளினால் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பெரிய முதலைகள் தலைமறைவாக ஆரம்பித்து விட்டதாகவும் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் நீதியை நிலைநாட்டுவதற்கான சிறந்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள். 

அது போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையாகவும் அமைந்துள்ளது. ஆனால், ஆரம்பத்திலேயே இதுதொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

images/content-image/2023/12/1703147269.jpg

நீதிக்கான சுற்றிவளைப்புகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் நாங்கள் இவ்வாறானதொரு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கப் போவதாக ஆரம்பத்திலேயே கூறிவிட்டார்கள். 

யுத்தத்தின் போது இவ்வாறான தாக்குதல்களை முன்னெடுக்கப் போகிறோம் என்று எதிரிகளுக்கு தெரியப்படுத்துவதால் அந்த போர் வெற்றியில் நிறைவடையாது. 

போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக சுற்றிவளைப்புகளை ஆரம்பிப்பதற்கு முன்னரே நாங்கள் இவ்வாறானதொரு வேலைத்திட்டங்களை செய்யப்போவதாக அறிவித்து விட்டார்கள். 

அவ்வாறு செய்வதால், போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பெரிய மீன்களுக்கு பதிலாக தற்போது சிறிய சிறிய மீன்களே இதில் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பெரிய தலைகள் தலைமறைவாவதற்கான பாதைகளை கண்டுபிடித்து மறைய ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், நீதிக்கான சுற்றிவளைப்பு மிகவும் முக்கியமானதாகும். 

இதனை வெற்றிகரமாக்க வேண்டுமென்றால் போதைப்பொருள் பாவனையாளர்களையும் சிறியளவான வியாபாரிகளையும் கைதுசெய்வதால் பயனில்லை. 

அதற்கு மாறாக இந்த வியாபாரத்துடன் தொடர்புடைய பிரதான நபர்கள், அரசியல் ஒத்துழைப்புடன் இயங்கும் வியாபாரிகள், அரசியல்வாதிகள் என ஒவ்வொரு தரப்பினருக்கும் சட்ட ரீதியான தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!