தரமற்ற தடுப்பூசி கொள்வனவு - விசாரணைக்கு அழைக்கப்பட்ட சமன் ரத்நாயக்க!
#SriLanka
#Investigation
#Medical
#Vaccine
PriyaRam
1 year ago
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை கொள்வனவு செய்து மருத்துவமனைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், அவரது அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த அண்மையில் விசாரணையின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், நாட்டில் சுமார் 2,000 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி தொடர்பாக ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உட்பட 6 பேர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.