மியன்மாரில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
மியன்மாரில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை!

மியான்மாரில் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள இளைஞர்களை மீட்பதற்கு பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக்க பண்டார  தெரிவித்துள்ளார்.  

மியன்மாரின் சைபர் குற்ற வலயம் என அடையாளம் காணப்பட்ட பகுதியில் சிக்கிய இந்த 56 இலங்கை இளைஞர், யுவதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு மியான்மாரின் உள்விகார அமைச்சர் அனுமதி வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மியான்மார் மற்றும் தாய்லாந்து எல்லை பகுதியில் இந்த சைபர் கிரிமினல் ஏரியா அல்லது சைபர் குற்ற வலையத்தில் இலங்கையைச் சேர்ந்த 56 இளைஞர், யுவதிகள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வலயம் முழுமையாக பயங்கரவாதிகளால் கட்டுப்படுத்தப்பட்டு வருவதனால் இளைஞர்களை விடுதலை செய்வதில் பல சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலங்கையர்களை சந்திப்பது தொடர்பில் மியன்மார் இராணுவ ஆட்சியின் அதிகாரிகள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!