வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள இந்தியா : திடீர் விலை உயர்வால் அவதிபடும் இலங்கை மக்கள்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள இந்தியா : திடீர் விலை உயர்வால் அவதிபடும் இலங்கை  மக்கள்!

இந்தியாவின் பெரிய வெங்காய ஏற்றுமதி தடை இன்னும் ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கையில் வெங்காயத்தின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

தற்போதைய நிலைவரப்படி  இலங்கையில ஒரு கிலோ வெங்காயம் 600 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

2024ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை இந்தியாவில் உள்நாட்டில் வெங்காய விலையை குறைவாக வைத்திருக்க மோடி அரசின் முயற்சிகளே இதற்குக் காரணம்.  

ஏற்றுமதி சந்தையில் இருந்து இந்தியா விலகிய பிறகு சீனா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் வெங்காயத்தின் விலையை உயர்த்தியுள்ளதால், இந்தியாவில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவாக இருப்பதையும் இது காட்டுகிறது. 

வெங்காயம் மற்றும் முட்டை விலை உயர்ந்து வரும் நிலையில், சந்தையில் காய்கறிகளின் விலையும் நுகர்வோரால் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!