இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை! வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்!

#SriLanka #weather #Mullaitivu #Flood #Disaster
Mayoorikka
1 year ago
இடைவிடாது  பெய்து வருகின்ற கனமழை! வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . 

 முத்துஐயன் கட்டுக்குளம் 4 வான் கதவுகளும் திறக்கபட்டுள்ளதுடன் 2 அடி வான் பாய்கிறது. 

images/content-image/2023/1702891475.jpg

முத்துயன்கட்டு ,பேராறு , முத்துவினாயகபுரம்,பண்டாரவன்னி வசந்தபுரம் மன்னகண்டல் ஆகிய கிராம ஆகிய கிராம மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று (18.12.2023) அதிகாலை தொடக்கம் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் அவர்களை கிராமத்தில் இருந்து மீட்டு இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

images/content-image/2023/1702891493.jpg

 111 குடும்பங்களை சேர்ந்த 355 பேரே இவ்வாறு மன்னகண்டல் அ.த.க பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . 

images/content-image/2023/1702891514.jpg

மழை தொடர்ந்து பெய்துவருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளனர். இதேபோன்று குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலைமையில் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதோடு வான் பாய்கின்ற நீர் மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

images/content-image/2023/1702891653.jpg


images/content-image/2023/1702891676.jpg

images/content-image/2023/1702891555.jpg

images/content-image/2023/1702891536.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!