கடமைகளை பொறுப்பேற்றார் மட்டுவின் புதிய அரச அதிபர்!

#SriLanka #Batticaloa
PriyaRam
1 year ago
கடமைகளை பொறுப்பேற்றார் மட்டுவின் புதிய அரச அதிபர்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ‘திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன்‘ இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

32 வருடகாலமாக இலங்கை நிர்வாக சேவையில் பல்வேறு பதவிகளில் இருந்த இவர், கடந்த 2022.01.07 ஆம் திகதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில், கடந்த 13ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.

 இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் புதிய மாவட்ட அரசாங்க அதிபரின் குடும்பத்தினர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!