கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் விடுத்துள்ள முன்னெச்சரிக்கை!
#SriLanka
#Kilinochchi
#weather
#Mullaitivu
#Flood
#Disaster
Mayoorikka
2 years ago
இரனைமடு குளத்தின் நீர் வரத்து சடுதியாக அதிகரித்து வருவதனால் அதிகளவான நீரினை வெளியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் அதிகளவான நீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதால், குளத்தின் கீழ் பகுதியில் இருக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன், தங்கள் பிரதேசங்களில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிராம அலுவலர்களுக்கு அறிவித்து, உரிய நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை முத்தயன் கட்டு,தண்ணிமுறிப்பு, மதவாளசிங்கன், சிறிய குளங்கள் நீர் வரத்து சடுதியாக அதிகரித்து வருவதனால் முல்லைத்தீவு மக்களும் அவதானமாக இருக்க வேண்டப்பப்படுகின்றீர்கள்