அலவ்வ, மாபோபிட்டியவில் தாயை கொலை செய்த மகன்! பொலிஸார் தீவிர விசாரணை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அலவ்வ, மாபோபிட்டிய பிரதேசத்தில் தாயை மகன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாபோபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையை செய்த சந்தேக நபர் உயிரிழந்தவரின் இளைய மகன் என்பதும், அவர் குடித்துவிட்டு வந்து தாயுடன் தகராறு செய்த நிலையில் கொலையை செய்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.