களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (11.12) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் காரணமாக கடந்த 4ஆம் திகதி மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களையும் மூட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

அதன்படி இன்று முதல் பல அதிகாரிகளின் கீழ் ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பில் விளக்கமளித்துள்ள, களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா. கடந்த 5ம் திகதி பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட வேண்டும், மாணவர்களின் படிப்பை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும், அந்த சம்பவம் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருந்தால், வரும் 9ம் திகதி  முதல் குழுவிடம் புகார் அளிக்கலாம் எனவும் கூறியிருந்தோம். இந்நிலையில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. 

11  விஞ்ஞான பீடம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம், வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் மாணவர்கள் இன்று ஆரம்பமாகவுள்ளனர். சமூக விஞ்ஞான பீடம் மற்றும் மனிதநேய பீடம் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகும்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!