உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் வாடியதன்னை கிராம இளைஞன்
ஹெம்மாதகம, வாடியதன்னை கிராமத்தை சேர்ந்த அஷ்ரப் முக்தார் அவர்கள் உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் வாடியதன்னை கிராமத்தின் முதல் சட்டதரணியாக வரலாற்றில் இடம் பிடிக்கிறார்.
வாடியதன்னையை சேர்ந்த முக்தார் தம்பதிகளின் மகனான அஷ்ரப் அவர்கள் கே/மாவ/ வாடியதன்னை மு.க.வி, அல் அஸ்ஹர் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவார். ஹெம்மாதகம பகுதிக்கும் தான் கற்ற கலாநிலையங்களுக்கும் தனது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர், பிரதேசத்தின் சமூக மாற்ற செயல்பாட்டாளராக பிரதேச கல்வி வளர்ச்சியில் அதிக கரிசனை கொண்டவராக, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் நெருங்கிய உறவை பேணுவதோடு அவர்களின் வளர்ச்சிக்காக பல வியூகங்களை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.
ஊரின் சிவில் அமைப்புகள், WESDA போன்றவற்றின் பிரதான நிர்வாகியாகவும் இருப்பதுடன் வளரும் இளைஞர்களுக்கு பல முன் மாதிரிகளை கொணடவராகவும் திகழ்கிறார்.
வரலாற்றில் தடம் பதிக்கும் சமூக கரிசனை மிக்க இளம் சட்டத்தரணி அஷ்ரப் முக்தார் அவர்களை Hmg News (ஹெம்மாதகம செய்திகள்) HMF Hemmathagama Media Forum சார்பாக நெஞ்சார்ந்த வழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.