கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்!

#SriLanka #Kilinochchi #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10.12) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.   இதன்படி கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றது. 

images/content-image/1702209682.jpg

இதன்போது கடந்த 15 வருடங்களாக தமக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக போராடியும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து வலியுறுத்தப்பட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இவ்விடயம் அனுப்பப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!