நாட்டில் மீண்டும் முடங்கவுள்ள அஞ்சல் சேவை!

#SriLanka #Protest
PriyaRam
2 years ago
நாட்டில் மீண்டும் முடங்கவுள்ள அஞ்சல் சேவை!

ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் நாளை மறுதினம் மாலை 4 மணி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் மீண்டும் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளது.

நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள அஞ்சல் காரியாலயங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏனைய பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

images/content-image/2023/12/1702022112.jpg

இதேவேளை, இன்றைய தினம் நாடாளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் அஞ்சல் தொழிற்சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அண்மையில் தமது கோரிக்கைகள் தொடர்பில், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருடன் கலந்துரையாடிய போதிலும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்து, அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!