யாழ்.மயான தகனமேடையிலிருந்த இருப்புத் துண்டுகள் திருட்டு!

#SriLanka #Jaffna #Police
PriyaRam
2 years ago
யாழ்.மயான தகனமேடையிலிருந்த இருப்புத் துண்டுகள் திருட்டு!

யாழில் இந்து மயானம் ஒன்றின் தகன மேடையில் இருந்த இரும்பு தூண்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வட்டுக்கோட்டை வழுக்கையாறு, இந்து மயானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் இரும்புத் தூண்கள் இல்லாமையினால் சடலங்களை எரியூட்டுவதில் மிகுந்த சிரமம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயானத்தில் பொருத்தியிருந்த மின் குமிழ்களையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

 இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மயானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!