போதைப் பொருள் கடத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்!

#SriLanka #Arrest #drugs #Drug shortage
Mayoorikka
2 years ago
போதைப் பொருள் கடத்திய   இளைஞனுக்கு விளக்கமறியல்!

பாடசாலை மாணவர்கள் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட தகவல் ஒன்றிணை அடுத்து அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிஸ் குழுவினர் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சிவில் உடையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

images/content-image/2023/1701934673.jpg

 இதன் போது குறித்த ஆலா என்ற பறவையின் செல்லப் பெயர் கொண்ட 39 வயதுடைய முஹம்மது இஸ்மாயில் அஸ்மீர் இயற்பெயருடைய இளைஞரை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்ட இளைஞன் தடுமாறிய நிலையில் அருகில் உள்ள கடலுக்கு சென்று பாய்ந்து தப்பி செல்ல முயற்சித்தார். இந்நிலையில் நீச்சல் தெரியாது திணறிய ஆலா என்ற இளைஞனை கைது செய்த பொலிஸ் குழு 100 கிராம் கஞ்சாவை உடமையில் இருந்து மீட்டுள்ளது.

 பின்னர் மறுநாள் செவ்வாய்க்கிழமை (5) சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!