ஆளணி பற்றாக்குறையால் வெளிநாட்டு சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

#SriLanka #Parliament #Ali Sabri
PriyaRam
2 years ago
ஆளணி பற்றாக்குறையால் வெளிநாட்டு சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

வெளிநாட்டு சேவைக்கு போதியளவு அதிகாரிகள் இல்லாததால், அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், 55 நாடுகள் மற்றும் இந்த நாட்டின் 24 துறைகளில் 164 அதிகாரிகள் மாத்திரமே பணியாற்றுவதாக தெரிவித்தார்.

இலங்கைக்கு மிக முக்கியமான நாடான இந்தியாவில் 6 பேர் மாத்திரமே பணிபுரிவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

images/content-image/2023/12/1701933381.webp

இலங்கை வெளிநாட்டு சேவைக்கு தேவையான பணியாளர்களின் எண்ணிக்கை 264 எனவும் தெரியவந்துள்ளது.

தேவையான அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டே வெளிநாட்டு சேவைக்கான ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!