இலங்கையின் தற்போதைய நிலைமையை வரவேற்றுள்ள உலக நிதி நிறுவங்கள்!
உலகப் பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் இலங்கை வங்குரோத்து நாடுகளில் இருந்து விரைவாக மீண்டு வருவதை உலக நிதி நிறுவனங்கள் கூட ஒப்புக்கொள்கின்றன என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பழைய முறைமையின்படி நாடு தொடர்ந்தால் நாட்டுக்கு நாளைய தினம் இருக்காது எனவும் கடந்த சில வருடங்களாக ஒரு தேசம் என்ற வகையில் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு பெற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
எனவே, புதிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இடைவெளி மற்றும் வரவு செலவு பற்றாக்குறை இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது, எனவே ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்து அரசாங்க செலவினங்களை குறைத்து அரசாங்க வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.