வாள் உற்பத்தியாளர்களை உடனடியாக கைது செய்யுங்கள் - பொலிஸாருக்கு வலியுறுத்தல்!

#SriLanka #Jaffna #Police
PriyaRam
2 years ago
வாள் உற்பத்தியாளர்களை உடனடியாக கைது செய்யுங்கள் - பொலிஸாருக்கு வலியுறுத்தல்!

யாழில் வாள் உற்பத்தியில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யுங்கள் என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு, யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழில் வாள்வெட்டு கலாசாரம், மற்றும் போதைவஸ்து பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும், ஒன்றிணைய வேண்டும்.

images/content-image/2023/12/1701925240.jpg

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு, வாள்வெட்டு கலாசாரத்தை தடுக்க வாள் உற்பத்தியாளர்களை கைது செய்யுங்கள்.

நாங்கள் வழிதவறாமல் செல்வதற்கு நம்பிக்கையூட்டும் வகையில் எமது வாழ்க்கை முறை இருக்க வேண்டும். 

எமது வாழ்க்கை முறையை சரியாக கொண்டு சென்றாலே எதிர்கால சந்ததிகள் முறையான, சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!