போர் முடிந்த பிறகு காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் கையாளும் : நெதன்யாகு

#SriLanka #War #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
போர் முடிந்த பிறகு காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் கையாளும் :  நெதன்யாகு

போர் முடிந்த பிறகு காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் கையாளும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.   

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், "போருக்கு பிறகு காசா பகுதியில் பாதுகாப்பை இஸ்ரேல் மட்டுமே கையாள முடியும். 

காசாவில் ராணுவமற்ற மண்டலத்தை உருவாக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கும். இதை செய்யக்கூடிய ஒரே சக்தி இஸ்ரேல்தான். காசா பகுதியின் ராணுவ மயமாக்கலுக்கான எந்தவொரு சர்வதேச சக்தியையும் அல்லது முயற்சியையும் நான் நம்பவில்லை. 

ஹமாசின் ராணுவ மற்றும் அரசியல் திறன்களை முற்றிலுமாக அகற்றி இஸ்ரேலுக்கு எதிர்காலத்தில் காசா பகுதியில் இருந்து எந்த அச்சுறுத்தலும் வராது என்பதை உறுதிப்படுத்துவோம். தற்போது காசாவில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் அனைவரையும் மீட்போம்" எனக் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!