அமெரிக்காவின் நெவாடா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு : மூவர் பலி!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

அமெரிக்காவில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரும் பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு காரணமாக குறித்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



