பதவி விலக தயார் : நாடாளுமன்ற விவாதத்தில் சஜித் அறிவிப்பு!

#SriLanka #Sajith Premadasa #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பதவி விலக தயார் : நாடாளுமன்ற விவாதத்தில் சஜித் அறிவிப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனிப்பட்ட காரணங்களுக்காக அரச நிதியைப் பயன்படுத்தியமைக்கான ஆதாரம் இருக்கும் பட்சத்தில், உடனடியாக பதவி விலகத் தயார் என அறிவித்துள்ளார்.  

மத்திய கலாசார நிதியம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் நேற்று (06.12) கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அளுத்கமகே, பிரேமதாச எந்த தவறும் செய்ததாக நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்றாலும், CCF மீதான கணக்காய்வு அறிக்கைகளின்படி, கிட்டத்தட்ட  10 ஆயிரம் கோடி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 

“எங்கள் எதிர்க்கட்சித் தலைவரும் இன்று இங்கு வந்துள்ளார். அவர் கலாசார விவகார அமைச்சில் இருந்தார். நான் தனிப்பட்ட முறையில் அவர் மீது சேற்றை வீசப் போவதில்லை, அந்த அளவிற்குச் செல்லமாட்டேன், எனது கடமையின் ஒரு பகுதியாக, கோப் குழுவில் நாங்கள் பெற்ற அறிக்கைகளைப் பற்றி மட்டுமே பேசப் போகிறேன். 

தணிக்கை தொடர்பான விசாரணைகளுக்காக மூன்று நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது, அவர்கள் கிட்டத்தட்ட   10 பில்லியன் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளையில் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர்களுக்கு வெளியே 1,300 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது என அளுத்கம தெரிவித்த நிலையில், இதற்கு பதிலளித்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உடனடியாக பதவி விலகுவதாக அறிவித்தார். 

அத்துடன் அரச நிதியை தனது சொந்தப் பயன்பாட்டுக்காகவோ அல்லது தனது கட்சிக்காகவோ தவறாகப் பயன்படுத்தியதற்கான எழுத்துப்பூர்வ ஆதாரம் உள்ளதா என்று சவால் விடுத்தார்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!