இந்திய-இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
உத்தேச இந்திய-இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான 12வது சுற்று பேச்சுவார்த்தைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இக்கலந்துரையாடல்கள் கொழும்பில் ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 1ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இதில் இருதரப்பு செயற்குழுக்களும் பல துறைகளில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 13வது சுற்று பேச்சுவார்த்தையை ஜனவரி 8ம் திகதி முதல் 10ம் திகதி வரை நடத்தவும், தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தையை மார்ச் மாதத்திற்குள் நடத்தவும் இரு தரப்பினரும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதன்படி, 12வது சுற்று பேச்சுவார்த்தை தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்த தகவல்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், உலக வங்கியின் நிதியுதவியுடன் நிதித்துறையின் பாதுகாப்பு வலையை வலுப்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.