எலான் மஸ்கிற்கு அழைப்பு விடுத்த ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்

#Death #world_news #Attack #War #ElonMusk #leader #Hamas
Prasu
2 years ago
எலான் மஸ்கிற்கு அழைப்பு விடுத்த ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்

காசா எல்லை பகுதிக்கு வந்து, இஸ்ரேல் செய்திருக்கும் நாச வேலைகளையும் பாருங்கள் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-க்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

"காசா எல்லைக்கு வந்து, காசா மக்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள அழிப்பு நடவடிக்கைகளை கண்கூடாக பார்த்து தெரிந்து கொள்ள அவரை நாங்கள் அழைக்கிறோம். 

50 நாட்களுக்குள் பாதுகாப்பில்லா காசா மக்கள் வீடுகளின் மீது 40 ஆயிரம் டன் வெடிபொருட்களை இஸ்ரேல் கொட்டித்தீர்த்துள்ளது." 

 "மேலும் இஸ்ரேல் உடனான உறவை நீட்டிப்பது குறித்தும், அவர்களுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்தும் அமெரிக்கா பரிசீலனை செய்ய வேண்டும்," என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒசாமா ஹம்டன் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4