அரசியல் தஞ்சம் கோரி வெளிநாட்டிற்கு ஓடமாட்டேன் - ரணிலின் பழிவாங்கலை பகிரங்கப்படுத்திய அமைச்சர்!
#SriLanka
#Parliament
#Ranil wickremesinghe
#Srilanka Cricket
PriyaRam
1 year ago

தனக்கு வாழ்வதற்கான உரிமை வேண்டும். வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி ஓட வேண்டிய தேவை தனக்கு இல்லையென விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமான நிலையில், வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் தன்னை அரசியல் ரீதியாக பழி வாங்குகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது எனவும் ஊழல் , மோசடிகளை வெளிக்கொணர்ந்த தனக்கு அப்படிச் செய்யலாமா? எனவும் இதன்போது கேள்வி எமுப்பியுள்ளார்.
தனது அரசியல் வரலாற்றில் தான் யாரிடமும் கை நீட்டியது கிடையாது. எந்த தீய செயல்களுக்கும் துணை நின்றதும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.



