விடுதலைப்புலிகள் அமைப்பின் முதல் மாவீரனுக்கு யாழில் அஞ்சலி!
#SriLanka
#Jaffna
PriyaRam
2 years ago
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதனுக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கரின் வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்திற்கு முன்பாக ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.