தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு! ஜனாதிபதி
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#economy
#Devolopment
Mayoorikka
2 years ago
நாட்டின் வங்குரோத்து நிலை முடிவுக்கு வந்துள்ளதால், தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட முன்மொழிவான 'உறுமய' தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்ச்சியின் முதல் கட்டம் அனுராதபுரம், நொச்சியாகமவில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.
அதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக விவசாய நவீனமயமாக்கல் சேவை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.