அம்பாறையில் மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவர் தற்கொலை!
அம்பாறையில் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்ட தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை பன்னல்கம பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக அறியமுடிகிறது.
உயிரிழந்தவரின் மனைவி கடந்த 06 மாதங்களுக்கு முன்பு தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில், குறித்த நபர் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாருக்கு தெரிவித்த நிலையில், தாய் கணவனிடம் வினவியுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவித்தால், குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக அவர் மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தகவல் கிடைத்ததும் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய தமன காவல்துறை அதிகாரிகள் குழு சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்றது.
பொலிஸாரின் வருகையை அவதானித்து, திடீரென வீட்டுக்குள் ஓடிய குற்றச்சாட்டப்பட்ட நபர், அங்கிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.