பாராளுமன்ற உறுப்பினர்களின் மின்சாரக் கட்டணம் பல மில்லியன் ரூபா நிலுவையில்!
#SriLanka
#Electricity Bill
#Power
#Minister
#Electric
Mayoorikka
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின்சார விநியோகத்திற்காக கடந்த வருட இறுதிக்குள் அறவிடப்பட வேண்டிய 16 மில்லியன் ரூபா பணம் செலுத்தத் தவறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
2022ஆம் ஆண்டு தொடர்பான கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், 74 மின் இணைப்புகளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 29 இணைப்புகள் தொடர்பான 05 மில்லியன் ரூபா பணம், 06 வருடங்களாக அறவிடப்படவில்லை எனவும் மேலும் 30 இணைப்புகள் தொடர்பான 03 மில்லியன் ரூபா பணம் ஒரு வருடத்திற்கும் மேலாக அறவிடப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.