ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் : ரொஷான் ரணசிங்க!
ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க தற்போதுள்ள கிரிக்கெட் சங்கங்களின் அதிகாரபூர்வ சபைகளை கலைத்து விட்டு புதிய அதிகார சபையை நியமிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மல்வத்து மகானாஹிமிக்கு விஜயம் செய்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்தக் குழுவினர் ஒரே இடத்தில் பேசி...'இதிலிருந்து வெளிவர வேண்டுமானால், 15 ஆண்டுகள் சிறைக்கு செல்ல வேண்டும்' என, கிரிக்கட் செயலர் பதவி விலகினார்.
மொஹான் டி சில்வா ராஜினாமா செய்தார். பணம் எடுக்க சரியான முறை இல்லை. முதலீடு என்ற போர்வையில் பணம் எங்கும் திருடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையால், நான் ராஜினாமா செய்துள்ளேன்' .
பல இடங்களில் இதுதான் நிலைமை. அதனால்தான் இவற்றைக் கலைக்க வேண்டும்."
"கிரிக்கெட்டை நேசிக்கும் தூய்மையான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து இந்த குழுக்களை நியமித்து இந்த தேர்தலுக்கு செல்ல வேண்டும். இல்லையெனில் இந்த திருடர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்த.