மாவீரர்கள் தின நாள் கார்த்திகை 27 பிளவுபட்டது ஏன்?

#SriLanka #Death #Day #War #Lanka4 #Soldiers #Tamilnews
Prasu
2 years ago
மாவீரர்கள் தின நாள் கார்த்திகை 27 பிளவுபட்டது ஏன்?

பேதங்களின்றி உலகத் தமிழ் மக்களின் ஈக நாளாக கார்த்திகை 27 உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

2009 இல் போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் மேய்ப்பன் இல்லாத மந்தைகள் எப்படி பிரிந்தும், பிரித்தும் திசை மாற்றப்படுகிறார்களோ அப்படி புலிகளின் ஒற்றுமையும் தாகமும் உடைக்கப்பட்டு கொள்கைகளும் ஏக்கங்களும் கண்ணாடித் துண்டுகளாக்கப்பட்டு வடுக்கள் எல்லாம் மறக்கப்பட்டு ஒரு வியாபாரம் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அபாயம் கண்ணுக்குள் எரி மலையை கொண்டுவந்து காட்டுகிறது.

images/content-image/1700945993.jpg

மாவீரர்களுக்கு தொடர்பில்லாதவர் தமது அரசியல் வியாபாரத்துக்கு அவர்களை உரிமைகோருகின்றனர்.புலிகள் இருக்கும்பொழுது எதிராக இருந்தவர்கள் சிலர் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். சிலரை இலங்கை இந்திய உளவுப்படை பின்னின்று இயக்கி தியாகங்களை ஆழ்குளிக்குள் புதைக்க முனைகின்றனர்.

அது ஒரு புறம் இருக்க உள்நாட்டில் நினைவேந்தலுக்கு தடை உறவுகளை இழந்த குடும்பங்கள் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வெளிநாடுகளில் சிதறிக்கிடக்கும் அமைப்பாளர்களின் சிதறல்களுக்குள் மாட்டி மௌன நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.

images/content-image/1700946005.jpg

இதன பலர் வீட்டிலேயே அனுஷ்டிப்பு செய்கிறார்கள். புலிகள் இருக்கும்பொழுது கோவில்களில் ஒரு சிலரே ஈகை சுடர் ஏற்றினார்கள். இப்பொழுது அனைத்து கோவில்களிலும் வணிகமாகிவிட்டது.

images/content-image/1700946019.jpg

போகும் போக்கை கணித்தால் வரும் காலங்களில் மாவீரர்கள் என்ற சொற்பதமே மறக்கப்பட வாய்ப்புக்கள் உண்டு. பொறுப்பானவர்கள் சரியான அணுகு முறை செய்தால் இழப்புக்களால் இருட்டில் வாடும் உறவுகளுக்கு ஒரு குப்பு விளக்கு கிடைப்பதாகிவிடும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!