முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி: இன்றும் ஐந்து எலும்புக் கூடுகள் மீட்பு
#SriLanka
#Death
#Court Order
#Mullaitivu
Mayoorikka
1 year ago

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றும் ஆறாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வு பணியின் போது 5 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி க.வசுதேவா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், துப்பாக்கி சிதறல்கள், சன்னங்கள் மீட்கப்பபட்டுள்ளதுடன் கையில் அணியப்படும் இலக்கத்தகடும் மணிக்கூடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி க.வசுதேவா தெரிவித்துள்ளார்.



